Brief history of the school
ஸ்ரீ சங்கரா பள்ளி, 1936 ஆம் ஆண்டு திரு. V.வாஞ்சி அய்யர் அவர்களால் தொடங்கப்பட்டது. முதலில், தொடக்கப் பள்ளியாக 5ஆம் வகுப்பு வரை இருந்த இப்பள்ளி, 1954-ல் நடுநிலைப் பள்ளியாக உயர்த்தப் பட்டது.
கடந்த 82 ஆண்டுகளாகக் கல்விப் பணியில் ஈடுபட்டு வரும் இப்பள்ளி, கிராமப்புறப் பள்ளிகளுக்கு ஒரு எடுத்துக் காட்டாக விளங்குகிறது.
தற்போது இப்பள்ளியில் 8 ஆசிரியர்களும், ஏறத்தாழ 130 மாணவ மாணவியர்களும் கல்வி பயின்று வருகின்றனர்.
ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை உள்ள இப்பள்ளி, ஒரு உதவி பெறும் பள்ளி ஆகும். தமிழக அரசு கல்வித் திட்டம் இங்கு போதிக்கப் படுகிறது.