விளையாட்டு, இலக்கியம், தோட்டம்

Mere bookish knowledge is not sufficient to face the real world

விளையாட்டு

விளையாட்டு மாணவர்களுக்கு மிகவும் முக்கியமானது. தினம்தோறும் விளையாட்டு வகுப்பு உண்டு. உடற்பயிற்சி, யோகா முதலியவை சொல்லித் தரப்படுகின்றன.

ஆண்டு தோறும் விளையாட்டுப் போட்டி நடத்தப் படுகிறது. இதில் கீழ்க்கண்ட போட்டிகள் இடம்பெறும்.

- 100 மீ, 200 மீ ஓட்டம்
- 200 மீ ரிலே ஓட்டம்
- நீளம் தாண்டுதல்
- உயரம் தாண்டுதல்
- குண்டெறிதல்
- சாக்கு ஓட்டம்
- உருளைக்கிழங்கு பொறுக்குதல்
- கபடி
- கோகோ
- மாவட்ட அளவிலான தடகளப் போட்டிகள்
- Chess

இலக்கிய மன்றம்

இலக்கிய மன்றம் மாணவரது பேச்சு, எழுத்து, மொழித் திறமையை மேம்படுத்தும் வகையில் செயல்பட்டு வருகிறது. இதில் பலவிதமான போட்டிகளும் பயிற்சிகளும் நடத்தப்படுகின்றன.

- பேச்சுப் போட்டி
- ஒப்புவித்தல் போட்டி (தமிழ், ஆங்கிலம்)
- எழுத்துப் போட்டி
- மேடை நாடகப் பயிற்சி
- குழந்தைகள் தினவிழாப் போட்டிகள்
- Inspire Award science Ehibition
- மேப் போட்டி
- வாய்பாடு போட்டி
- ஓவியப் போட்டி
- கோலப் போட்டி
- நினைவுப் போட்டி
- மாறுவேடப் போட்டி
- பாரதியார் பிறந்த நாள் போட்டிகள்

பாரதியார் பாடல்கள், கம்ப ராமாயணம், சீறாப்புராணம், தேம்பாவணி, விவேகானந்தர் பொன்மொழிகள் போன்றவற்றில் இருந்து பல பகுதிகளில் மாணவர்களுக்குப் பயிற்சி தரப்படுகிறது.

கலை, பண்பாடு

தம்முடைய பாரம்பரியத்தை அறிந்து அதனைப் பாதுகாத்தல் மிகவும் அவசியமானது. தமிழக பாரம்பரியமான  மேடை நாடகம், பலவிதமான ஆட்டங்கள் எல்லாம் நமது வாழ்வுடன் பிணைந்துள்ளன.

பள்ளி இலக்கிய மன்ற விழாக்களிலும், ஆண்டு விழாவிலும் கீழ்க்கண்ட பண்பாட்டு நிகழ்ச்சிகள் தவறாமல் நடைபெறுவது வழக்கம்.

- கரகம், பரதம்
- கும்மி
- கோலாட்டம்
- மேடை நாடகம் (வேடத்துடன்)

தோட்டம்

இயற்கையுடன் இணைந்து வாழ்தல், நல்ல உணவுக்கான காய்கறிச் செடிகளைப் பயிரிடுதல் போன்ற நல்ல விஷயங்களைத் தோட்டக்கலை நமக்குக் கற்றுத் தருகிறது.

சங்கரா பள்ளியில் கீழ்க்கண்ட காய்கறிச் செடிகொடிகள் பயிரிடப் படுகின்றன.

- வெண்டை, கத்தரி
-  கொத்தவரை, அவரை, புடலை
- முள்ளங்கி, மிளகாய், கீரை
- வெள்ளரி, பரங்கி, பூசணி
- தக்காளி