Academics - பாடத் திட்டம்

தமிழக சமச்சீர் கல்வித் திட்டம்

Syllabus

ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை உள்ள சமச்சீர் கல்வித் திட்டத்தின் படி, பாடங்கள் போதிக்கப் படுகின்றன. சொல்லிக் கொடுக்க வேண்டிய விஷயங்கள், பயிற்சிகள், வரைபடம் மூலம் அறிதல், மாணவர்கள் கூட்டாகப் பயிற்சி செய்தல், தானே தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள் என்று பல பிரிவுகளாகப் பாடங்கள் அமைந்துள்ளன.

http://www.textbooksonline.tn.nic.in/

Languages

மொழி ஒருவரது ஆயுதமாகும். தமிழ், ஆங்கிலம் இரண்டிலும் மாணவர்கள் படிக்க, எழுத, பேசத் திறமை பெற்றிருத்தல் இக்காலத்தில் மிகவும் அவசியம்.

மொழி போதனைக்கு சங்கரா பள்ளி அதிக முக்கியத்துவம் அளிக்கிறது.

Laboratory

அறிவியல் சம்பந்தமான விஷயங்களை, நேரில் பரிசோதனை செய்து அறிந்து கொள்ளுதல் மாணவர்களின் புரிதலைப் பன்மடங்கு உயர்த்தும்.

பரிசோதனைக்கு வேண்டிய உபகரணங்கள் உள்ளன. ஆசிரியர்கள் செய்து காட்டி விளக்குவதன் மூலம், மாணவர்களின் ஆர்வம் அதிகரிக்கிறது.